அச்சத்தில் மக்கள்!!! ரிக்டர் அளவு 6.1 ஆக பதிவான கிரீஸ் நாட்டு நிலநடுக்கம்...!
People in fear Earthquake in Greece recorded at 6point1 Richter scale
இன்று கிரீஸ் நாட்டு தீவான காசோசில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தத் தீவின் தலைநகரான பிரையிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1-ஆக பதிவாகியுள்ளது.மேலும், இந்த நிலநடுக்கம் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
இதில் முதற்கட்டமாக உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
அதுமட்டுமின்றி, கிரீஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் எகிப்து, இஸ்ரேல், துருக்கி, லிபியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.
English Summary
People in fear Earthquake in Greece recorded at 6point1 Richter scale