தொடர்ந்து 3-வது நாளாக நீடித்துவரும் ஒகேனக்கல் நீர்வரத்து...!
water inflow from Hogenakkal continues 3rd consecutive day
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டதையடுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து குறையத் தொடங்கியது.

இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக 6,500 கன அடியாக தண்ணீர் நீர்மட்டம் நீடித்து வருகிறது.இருப்பினும் சினிபால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும், சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இருந்தாலும் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்,நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
water inflow from Hogenakkal continues 3rd consecutive day