ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! ஈசியாக 50 ரூபாயில் டூப்ளிகேட் கார்டு வாங்கலாம்!
Lost your Aadhaar card Donot worry You can easily buy a duplicate card for just Rs 50
வங்கிக் கணக்கு திறக்க, மொபைல் சிம் எடுக்க, அரசுத் திட்டங்களின் பலன்களை பெற போன்ற அனைத்திற்கும் ஆதார் அட்டை இப்போது அவசியமான ஆவணமாக மாறியுள்ளது. இவ்வளவு முக்கியமான ஆதார் அட்டை சில நேரங்களில் தொலைந்து போகலாம் அல்லது சேதமடையலாம். அப்படிப்பட்ட சூழலில் பதற்றப்படாமல் உடனடியாக மறுபிரதி ஆதார் அட்டையை எளிதில் பெறலாம்.
1. இ-ஆதார் பதிவிறக்கம் (இலவசம்)
முதலில் UIDAI இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு ‘Download Aadhaar’ என்பதைத் தேர்வு செய்யவும்.
ஆதார் எண், பதிவு ஐடி (Enrolment ID) அல்லது மெய்நிகர் ஐடி (VID) ஆகியவற்றில் ஒன்றை உள்ளிடவும்.
காப்சாவை நிரப்பி ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிட்டு உறுதிப்படுத்தினால், உங்கள் ஆதார் உடனடியாக PDF வடிவில் (இ-ஆதார்) பதிவிறக்கம் செய்யப்படும்.
இதுவே உத்தியோகபூர்வ ஆதார் பிரதியாகும்; தேவைக்கேற்ப நகலெடுத்து பயன்படுத்தலாம்.
2. PVC ஆதார் அட்டை (₹50 கட்டணத்துடன்)
UIDAI இணையதளத்தில் ‘Order Aadhaar PVC Card’ என்பதைத் தேர்வு செய்யவும்.ஆதார் எண், காப்சா உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை உள்ளிடவும்.அட்டை முன்னோட்டத்தை பார்த்து, ₹50 கட்டணம் செலுத்தினால், விரைவு அஞ்சல் மூலம் அட்டை வீட்டிற்கு வந்து சேரும்.
3. தேவையான ஆவணங்கள்
மறுபிரதி ஆதார் விண்ணப்பிக்க பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள ஆவணங்கள் பயன்படும்.முகவரி மாற்றத்திற்காக மின்சாரம், தண்ணீர், எரிவாயு பில், வங்கி அறிக்கை, ரேஷன் கார்டு போன்றவை தேவைப்படும்.பிறந்த தேதி திருத்தத்திற்காக பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கட்டாயம்.
4. செலவு மற்றும் சலுகைகள்
இ-ஆதார் பதிவிறக்கம் முற்றிலும் இலவசம்.PVC ஆதார் அட்டை பெற ரூ.50 மட்டும் கட்டணம்.ஆதார் அட்டை தொலைந்தால், கிழிந்தால் அல்லது சேதமடைந்தால், இந்த முறைகள் மூலம் கூடுதல் பிரதிகளை எளிதாகப் பெறலாம்.
English Summary
Lost your Aadhaar card Donot worry You can easily buy a duplicate card for just Rs 50