இன்ஸ்டாகிராமில் வந்த புதிய அப்டே - என்னனு தெரியுமா?
new update in instagram app
சமூக வலைத்தளங்களில் தற்போது முதலிடத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்த செயலியில் ரீல்ஸ் எனப்படும் ஷார்ட் வீடியோக்கள் இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது.
இதனால், இளைஞர்கள் எந்நேரமும் ரீல்ஸ்களில்யே மூழ்கி கிடக்கின்றனர். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களை கவர அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது.

அந்த வகையில், தற்போது, இன்ஸ்டாகிராமில் லிங் ரீல் என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். இந்த புதிய வசதி மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை செட் செய்ய முடியும்.
அதாவது, இன்ஸ்டாகிராமில் எந்த ரீல்ஸ்க்கு அடுத்து எந்த ரீல்ஸ் இடம் பெற வேண்டும் என்பதை ரீல்ஸ் அப்லோடு செய்பவர்களே முடிவு செய்து கொள்ள முடியும். இந்தப் புதிய வசதி பயனர்களுக்கு ரீலிஸ் பார்ப்பதற்கு மேலும் வசதியாக இருக்கும்.
English Summary
new update in instagram app