கொத்தடிமை திருமா! விஜய் வருங்கால கமல்! இது தமிழக வெற்றி கழகம் அல்ல வெட்டி கழகம்! விளாசிய அர்ஜீன் சம்பத்!
Vijay is the future Kamal This is not Tamil Nadu Victory Party this is a Vetti Party Arjeen Sampath is a disgrace
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், தமிழக அரசையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது:“தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வெற்றி பெற வேண்டும். அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரிக்க வேண்டும். சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறோம். அதிமுக-பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும்.
தவெக அரசியல் கட்சி அல்ல, அது திமுகவின் ஏ டீம். அவர்கள் நடத்தும் மாநாடு ரசிகர் மாநாடு மட்டுமே. அங்கு ரசிகர்கள் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டனர். ரசிகர்கள் மீது அக்கறையோ, கருணையோ இல்லை. எப்படி மாநாடு நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் அந்த மாநாடு தான். சேர் உடைப்பதை கலாச்சாரமாக நினைக்கின்றனர்.
பிஜேபியை எதிர்க்க திமுக ஏற்பாடு செய்கிறது. அதற்கே உதாரணமாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், விஜயின் வருங்கால அரசியல் முயற்சியும் உள்ளன. அது வெற்றி கழகம் அல்ல, வெட்டி கழகம். தவெக பாஜக கூட்டணியில் சேர்ந்தால் நாங்கள் ஆதரிப்போம். ஆனால், கிறிஸ்தவ-முஸ்லீம் கூட்டணியாக உருவான தவெக, இந்து மக்கள் கட்சிக்கு எதிரான கட்சி தான். தவெகின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதே எங்கள் நோக்கம்.” என தெரிவித்தார்.
மேலும் அவர்,
“பாமகவில் நடைபெறும் பிரச்சனைகள் உட்கட்சி பிரச்சனைகள். திருமாவளவன் திமுகவின் கொத்தடிமை. தூய்மை பணியாளர்கள் பிரச்சனையில் அவர் மவுனம் காத்துள்ளார். திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தற்காலிக பணியாளர், ஆசிரியர் பிரச்சனைகளில் நல்ல முடிவு எடுக்கவில்லை.
அருந்ததியர் மக்களுக்கு உண்மையான துரோகம் செய்கிறது விசிக தான். அவர்கள் மீது ஆணவக் கொலைகள் நடக்கும்போது குரல் கொடுக்கவில்லை. வன்னியரசு, ராமன் குறித்து தவறான பேச்சுகள் வந்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வைரமுத்து மோசமாக பேசியும், பொன்முடி பெண்களை அவமதித்தும் இருந்தபோதும், ஏன் கைது செய்யப்படவில்லை?
இந்த அரசு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறது. ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை. அனைவருக்குமான அரசு என்று சொன்னாலும், ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது.” என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.
English Summary
Vijay is the future Kamal This is not Tamil Nadu Victory Party this is a Vetti Party Arjeen Sampath is a disgrace