ஏலியன் ரகசியங்கள் இனி அம்பலம்! பென்டகன் மர்மங்களை உடைக்கும் டிரம்ப்!
Pentagon Secrets Unlocked Trump vs the Alien Mystery
சுமார் ஒரு நூற்றாண்டாக நீடிக்கும் வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) குறித்த மர்மங்களைத் திரைவிலக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மர்மங்களும் ஒபாமாவின் பார்வையும்:
வானில் தோன்றும் வினோத விமானங்கள் (UFOs) மற்றும் 'ஏரியா 51' போன்ற ரகசிய இடங்கள் குறித்த விவாதங்களுக்கு அமெரிக்காவில் பஞ்சமே இல்லை. முன்னதாக இதுபற்றிக் குறிப்பிட்டிருந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, "பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதால் மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது; ஆனால் ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கான ஆதாரம் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை" எனக் கூறியிருந்தார்.
டிரம்பின் அதிரடி உத்தரவு:
இந்தச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வினோத விமானங்கள் தொடர்பான ரகசியக் கோப்புகளைப் பொதுவெளியில் (Public Domain) வெளியிட டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் அது தொடர்புடைய துறைகள், இனி தங்கள் வசம் உள்ள ஆதாரங்களை மறைக்க முடியாது.
டிரம்பின் 'நச்' பதில்:
இதுகுறித்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்: "ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது; அதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை.
ஆனால், பலரும் அதைத் தீவிரமாக நம்புகிறார்கள். இந்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் ஒபாமாவின் சந்தேகங்களை நான் நீக்குவேன்."
ஒபாமாவின் 'சந்தேகத்தை' நீக்க டிரம்ப் எடுக்கும் இந்த அதிரடி முயற்சி, வேற்றுக்கிரகவாசிகள் குறித்த உண்மைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுமா என்ற ஆர்வம் உலகெங்கும் எழுந்துள்ளது.
English Summary
Pentagon Secrets Unlocked Trump vs the Alien Mystery