பகீர் சம்பவம்.... புதைத்த சடலங்களுடன்... கல்லறைக்கு பூட்டு.! - Seithipunal
Seithipunal


பெண் சடலங்களை தோண்டி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வரும்  நிகழ்வு பாகிஸ்தானில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கல்லறைகளுக்கு இரும்பு கம்பிகள் வைத்து பூட்டு போட்டு பாதுகாக்கின்றனர் இறந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்.

இது தொடர்பாக கட்டுரை வெளியிட்டு இருக்கும் பாகிஸ்தான் பத்திரிகையான டெய்லி டைம்ஸ்  2020 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் சம்பவங்களை பட்டியலிட்டு இருக்கிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள  உகாரா என்ற இடத்தில் இறந்த பெண் சடலம் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் குலாமுல்லா என்ற இடத்தில் 18 வயதான இளம் பெண் ஒருவரின் சடலம்  புதைக்கப்பட்ட இரவு அன்றே  தோண்டி எடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் இறந்த பெண் குழந்தைகளின் பெற்றோர் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இரும்புக் கம்பியின் மூலம் கதவு அமைத்து பூட்டு போட்டு வருகின்றனர்.

இதனைப் பற்றி பாகிஸ்தானை சார்ந்த சமூக செயல்பாட்டாளரான ஹாரி சுல்தான் தனது ட்விட்டரில் கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். பாகிஸ்தானின் கலாச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் ட்விட்டரில் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pakstan women graves dig up and corpses molested parents protect the graves by making iron doors


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->