இரண்டாவது முறையாக முடக்கப்பட்ட பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு - நடந்தது என்ன?
pakisthan twitter account ban in india
இந்தியாவில் பாகிஸ்தான் நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள ட்விட்டர் பயனர்கள் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கை பின்பற்றவோ, பார்க்கவோ இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் ட்விட்டர் நிறுவனத்தின் விதிகளின் படி எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இதுவரை எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதற்கு முன்னதாக இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிபிசி பஞ்சாபியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
pakisthan twitter account ban in india