இஸ்லாமாபாத் நீதிமன்றத் தாக்குதல்: தற்கொலைப்படை தீவிரவாதியின் நாட்டை கண்டுபிடித்த பாகிஸ்தான்!
Pakistan suicide bomber Afghanistan
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை கார் வெடிகுண்டுத் தாக்குதலை நிகழ்த்தியவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மெஹ்சின் நக்வி உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அறிவிப்பு:
இன்று (நவம்பர் 13) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் மெஹ்சின் நக்வி, இஸ்லாமாபாத்தின் ஜி-11 பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், தற்போது தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
மற்றொரு தாக்குதலுக்கும் தொடர்பு:
இஸ்லாமாபாத் தாக்குதல் மட்டுமின்றி, கைபர் பக்துன்குவாவில் உள்ள ஒரு கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலுக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களே காரணம் என்றும் அமைச்சர் நக்வி கூறினார்.
ஆப்கானிஸ்தானில் 2021-ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகப் பாகிஸ்தான் அரசு நீண்டகாலமாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், உள்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அண்டை நாடுகளுக்கு இடையே இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
English Summary
Pakistan suicide bomber Afghanistan