இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் தவறான பாதையில் செல்கிறது.! சொந்த மக்களே குமுறல்.!
pakistan go wrong way
பாகிஸ்தான் நாடு தவறான பாதையில் செல்வதாக எண்பத்தி ஏழு சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் ஐபிஎஸ்ஓஎஸ் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும், கருத்துக்கணிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இந்த கருத்துக்கணிப்பில் 1,100 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்களில் 87 சதவீத மக்கள் கருத்துபடி, பாகிஸ்தான் நாடு தவறான பாதையில் செல்வதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளின் விவரம் பின்வருமாறு,
46 சதவீதம் பேர் பாகிஸ்தானின் பொருளாதார நிலை பலவீனமாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
43 சதவீதம் பேர் பணவீக்கம் தான் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

14 சதவீதம் பேர் பாகிஸ்தானில் வேலையின்மை முதன்மையான பிரச்சினையாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
12 சதவீதம் பேர் வறுமை பெரும் பிரச்சினையாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
49 சதவீதம் பேர் பொருளாதார நிலை அப்படியேதான் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
46 சதவீதம் பேர் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
5 சதவீதம் பேர் மட்டுமே நாட்டின் பொருளாதார நிலை வலுவாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்த 6 மாதங்களில் பொருளாதார நிலைமை:
64 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
12 சதவீதம் பேர் பொருளாதார மேம்பாட்டில் நம்பிக்கை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
24 சதவீதம் பேர் நம்பிக்கையோ அல்லது ஏமாற்றமோ இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட நிதி நிலைமை குறித்து :
47 சதவீதம் பேர் பலவீனம் மற்றும் நிலையற்று இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
5 சதவீதம் பேர் வலுவாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
48 சதவீதம் பேர் தங்கள் தனிப்பட்ட நிதி நிலை நடுத்தரமாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு தவறான பாதையில் செல்கிறது என்ற கேள்விக்கு பாகிஸ்தானியர்களில் 87 சதவீதம் பேர் ஆம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.