வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு; தெய்வநாயகப் பெருமாள் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


2025 ஆம் ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி வரும் 30-ஆம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய நாள் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் பெருமாள் கோவில், மதுரையில் அழகர்கோயில், கூடலழகர் பெருமாள் கோயில் மற்றும் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்கள் மற்றும் இன்னும் பல பெருமாள் கோவிகள் சொர்க்கவாசல் திறப்புக்கு பிரசித்தி பெற்றவையாக உள்ளன. 

இந்த கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 20-ஆம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கி, தினம் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதில், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30-ஆம் தேதி இரவு 07 மணிக்கு நடை பெறுகிறது. அப்போது வழித்துணைப் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுத்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்த விழாவையொட்டி தினமும் இரவு 07 மணிக்கு ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதேபோல் மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் கோயில்களின் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

அத்துடன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான தெய்வநாயகப் பெருமாள் கோயில் கொந்தகையில் அமைந்துள்ளது. அங்கு கும்பாபிஷேக விழாவிற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, வரும் 30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதி உலா ஏற்பாடுகள் ஏதும் நடைபெறாது என்று கூறப்படுகிறது.

ஆனால், அன்றைய தினம் காலை 06 மணி முதல் 07 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு மட்டும் நடைபெறும் என்றும், அதனை காண்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

On December 30th the Gateway to Heaven will be opened in observance of Vaikuntha Ekadashi


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->