தொடர் வெள்ளத்தால் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கிய பாகிஸ்தான்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

இதுகுறித்து பாகிஸ்தான் பருவநிலைமாற்ற அமைச்சர், நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தால், மேலும் 25 குழந்தைகள் உட்பட 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த உயிரிழப்பில் 441 குழந்தைகளும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதற்கிடையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷேபாஸ் சரிப் தலைமையில், வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டம் கூடியது. 

அந்த கூட்டத்தில், வெள்ள நிலைமையை சமாளிப்பது குறித்து பேசப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10.57 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு படையினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan continous floods one in third submerged in water


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->