மசூதியை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்!! சொன்ன காரணம் தான் அங்க ஹைலைட்!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் தற்போது வரை இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும், பாலஸ்தீனியர்கள் 4,469 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். காஜாவில் ஹமாஸ் அமைப்பினரின் பதுங்கு குழிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் 2 முக்கிய கமெண்டர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள அல் அன்சார் மசூதி வளாகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த மசூதியில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய ஜிகாதிகள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்தான புகைப்படங்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு காசாவில் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை தீவிர படுத்த இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person was killed by Israeli army attack on mosque


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->