இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்: இங்கெல்லாம் செல்லக்கூடாது - நிபந்தனை விதித்த நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் 7 ஆம் மற்றும் கடைசி கட்ட வாக்கு பதிவு நடைபெறும் ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

இதனை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது. 

தேவைப்படும்பட்சத்தில் துணை நிலைய ஆளுநர் ஒப்புதலுடன் கோப்புகளில் கையெழுத்திடலாம் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேசக்கூடாது. 

மேலும் இந்த வழக்கில் அவரது பங்கு தொடர்பான எந்தவித கருத்தையும் தெரிவிக்கக் கூடாது. இடைக்கால ஜாமின் தொகையாக ரூ. 50.000 செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனையை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kejriwal interim bail not go CM office


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->