இனி தேர்தலில் வாக்களிக்கவிட்டால் வரி உயர்வு, தண்டனை - அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


தேர்தலில் வாக்களிக்க வராத வாக்காளர்களுக்கு வரியை அதிகப்படுத்துவது உள்ளிட்ட தண்டனைகளை கொடுக்க வேண்டும் என்று, முன்னாள் மக்களவை உறுப்பினரும், நடிகருமான பரேஷ் ராவல் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், இன்று 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்த தேர்தலில் பாஜகவின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், பிரபல நடிகருமான பரேஷ் ராவல், தனது வாக்கினை மும்பையில் பதிவு செய்தார். 

பின்னர் செய்தி அவர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "நம்முடைய அரசு எதையும் செய்வதில்லை என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் இன்று நீங்கள் வாக்கு செலுத்தவில்லை என்றால், அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நம்முடைய அரசாங்கம் அல்ல. 


 

வாக்களிக்காமல் இருப்பது மிகப்பெரிய தவறு. வாக்களிக்க வராத வாக்காளர்களுக்கு வரியை அரசாங்கம் அதிகப்படுத்த வேண்டும். அல்லது வேறு விதமான தண்டனைகளை வழங்க வேண்டும்" என்று நடிகர் பரேஷ் ராவல் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் பரேஷ் ராவல் தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரை போற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல் பாலிவுட் வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you dont vote you will funish


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->