கேரளா | கோவில்களில் அரளி பூக்கள் பயன்படுத்த தடை! பின்னணியில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் செவிலியர் ஒருவர் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததை செல்போனில் உறவினருக்கு தெரிவித்துக் கொண்டிருந்தபோது தெரியாமல் அரளி பூவை சாப்பிட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் அரளி செடியை தற்செயலாக தின்ற பசுவும் கன்றும் உயிரிழந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் பூஜைக்காக அரளி பூக்கள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் அரளி பூக்களை பூஜைக்கு பயன்படுத்த தடை இல்லை எனவும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகத்தின் கீழ் சுமார் 1200க்கும் மேற்பட்ட கோவில்கள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala temples using Prohibition Arali flowers


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->