குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால் முழு பலனும் கிடைக்கும்..? குலதெய்வம் தெரியாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு..?
On which day will you get the full benefits of worshipping the family deity
தலைமுறை தலைமுறையாக முன்னோர்களால் வழிபடப்பட்டு வரும் தெய்வம் குலதெய்வமாகும். நாம் எத்தனை இஷ்ட தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபடுவதும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதும் மிக முக்கியம். இவ்வாறு குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே நிம்மதி, மகிழ்ச்சி, முன்னேற்றம், செல்வம் ஆகியவை கிடைக்கும்.
குல தெய்வத்தை முறையாக வழிபட்டு, குலதெய்வத்தின் அருளை பெற்றால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருளை நம்மால் முழுமையாக பெற முடியும். வாழ்க்கையில் பல விதமான துன்பங்கள், தடைகள், பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் அந்த நிலை மாற வேண்டும் என்றால் முறையாக குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

குலதெய்வத்தை கண்டு பிடிப்பது எப்படி..?
தனது குடும்பத்தின் குல தெய்வம் தெரிந்தவர்கள் அதை வழிபடலாம். ஆனால் குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருப்பவர்கள் குலதெய்வத்தை தெரிந்து கொள்ள நினைத்தால் தினமும் பூஜை அறையில் அதாவது 48 நாட்கள் நெய் விளக்கேற்றி, குலதெய்வம் எது என தனக்கு தெரிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு வழிபட்ட வேண்டும். இப்படி நீங்கள் செய்வதால் யாராவது உறவினர்கள் மூலமாகவோ அல்லது கனவிலோ குலதெய்வம் யார் என தெரிய வரும். அப்படியும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் நாடி ஜோதிடத்தில் குலதெய்வ காண்டத்தை பார்த்து தங்களின் குலதெய்வம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குலதெய்வம் கோவிலுக்கு எப்போது செல்ல வேண்டும்..?
மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ கண்டிப்பாக சென்று வழிபட வேண்டும். உங்களின் குலதெய்வம் கோவில் வெகு தொலைவில் உள்ளது, அடிக்கடி செல்ல முடியாது என்று நினைப்பவர்கள் வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து மிக எளிமையாக அதற்கு பூப்போட்டு தினமும் வழிபட்டு வரலாம். அதுவும் முடியவில்லை என்றால் தினமும் காலையில் எழுந்ததும் குலதெய்வத்தை மனதில் நினைத்து, "இன்றைய நாள் சிறப்பானதாக இருக்க வேண்டும். அனைத்தும் நல்லவையாக நடக்க அருள் செய்" என மனதார வேண்டிக் கொண்டு தினசரி பணிகளை செய்வதால் நிச்சயம் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

அத்துடன், குலதெய்வத்தை வழிபடுவதற்கும், குல தெய்வம் கோவிலுக்கு செல்வதற்கும் அனைத்து நாட்களும் விசேஷமானவை இருப்பினும் அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய இரண்டு நாட்களும் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் குலதெய்வம் கோவிலுக்கு நேரில் சென்றோ அல்லது வீட்டிலேயோ குலதெய்வத்திற்கு ஏதாவது நைவேத்தியம் செய்து படைத்து, வழிபட்டு வரலாம். இதுனால் குலதெய்வத்தின் அருள் எப்போதும் வீட்டில் நிறைந்திருக்கும். அதே போல் இந்த இரண்டு நாட்களில் குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதுடன் சிறப்பானதாக இருக்கும்.
அத்துடன், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் குலதெய்வ வழிப்படி செய்வது நல்லது. பூரண அருள் கிடைக்கும்.

- சிவ பெருமானாகவோ அல்லது சிவனுடன் தொடர்புடைய முனீஸ்வரர் போன்ற தெய்வங்களாக இருந்தால் திங்கட்கிழமை.
- முருகனுடன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் செவ்வாய்கிழமை.
- பெருமாளுடன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் புதன் மற்றும் சனிக்கிழமை.
- அம்பாள் அல்லது பெண் தெய்வமாக இருந்தால் வெள்ளிக்கிழமை.

குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்..?
உங்கள் குடும்பத்தில் இதுவரை குலதெய்வ வழிபாடே செய்தது கிடையாது. குலதெய்வத்தை கண்டு பிடிக்க வழியே இல்லை என்பவர்கள் ஏதாவது தெய்வத்தை குலதெய்வமாக ஏற்ற நினைப்பவர்கள் ஆண் தெய்வங்களில் முருகப் பெருமானை தாராளமாக குலதெய்வமாக ஏற்று வழிபடலாம்.
அதாவது, முருக வழிபாட்டில் அனைத்து தெய்வ வழிபாடுகளும் அடங்குகிறது. பெண் தெய்வத்தை குலதெய்வமாக ஏற்ற வேண்டும் என்றால் காமாட்சி அம்மனை வணக்கலாம். ஏனெனில், காமாட்சிக்குள் முப்பெரும் தேவர்களும் அடக்கம். மூன்று தேவியரின் அம்சமாகவும் விளங்குபவள். ஒருவேளை வைண தெய்வத்தை குலதெய்வமாக ஏற்ற விரும்பினால் திருப்பதி ஏழுமலையானை குலதெய்வமாக நினைத்து வணங்கலாம்.
English Summary
On which day will you get the full benefits of worshipping the family deity