புதிய 20 ரூபாய் நோட்டு வெளியிடப்படும்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!
Reserve Bank announces new 20 rupee note to be issued
புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள புதிய 20 ரூபாய் நோட்டுகளில் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து இருக்கும், அதில், மகாத்மா காந்தி படம் இருக்கும்.
இதே போன்று புதிய நோட்டுக்கள் வெளியிடப்படவுள்ளது. இந்த நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின் கையெழுத்து இடப்பட்டதாக இருக்கும். மற்றபடி வேறெந்த மாற்றங்களும் இதில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடி ஆகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
English Summary
Reserve Bank announces new 20 rupee note to be issued