ரயிலில் பயணம் செய்வோருக்கு மகிழ்ச்சி செய்தி.. காத்திருப்போர் பட்டியலில் புதிய நடைமுறை: ரயில்வே வாரியம் அறிவிப்பு..!
New procedure for waiting lists on trains Railway Board announces
ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் புதிய நடைமுறையை கொண்டுவர மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்ய உயர் வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் கீழ் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒதுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறை 2006-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
அதாவது, சாதாரண பெட்டியில் 02-ஆம் வகுப்பில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 03-ஆம் வகுப்பு குளிர்சாதன வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணம் இன்றி அவர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளில் இருக்கை வழங்கப்படும்.
-5phx7.png)
தற்போது இந்த திட்டத்தில் மத்திய ரயில்வே வாரியம் சில மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி, சாதாரண பெட்டியில் 02-ஆம் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 03-ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டி மட்டுமல்லாமல், 02-ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடம் இருந்தாலும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இதற்காக கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 03-ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 02-ஆம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணமின்றி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இந்த திட்டம் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே வாரியத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
New procedure for waiting lists on trains Railway Board announces