மீண்டும் விஸ்வரூம் எடுக்கும் புதிய கொரோனா வைரஸ்; சிங்கப்பூர், ஹாங்காங்கில் தொற்று அதிகரிப்பு; பீதியில் உலாகி நாடுகள்..!
New coronavirus infections increase in Singapore and Hong Kong
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவியது. இதனால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏராளம். கொரானாவின் கோரா தாண்டவத்தால் உலக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், சிங்கப்பூர், ஹாங்காங்கில் தற்போது கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதாக அண்மைக்காலமாக பதிவாகி வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உறுதி செய்துள்ளது. இதனை அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர். அங்கு தற்போதுள்ள கொரோனா தொற்று சதவீதம் 11.4 ஆகும் என்றும், இதுவே கடந்த மார்ச்சில் 1.7 சதவீதமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹாங்காங்கை தொடர்ந்து, சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன் படி, மே 03-ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. அத்துடன், தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், ஹாங்காங் நாட்டின் பிரபல பாடகர் ஈசன் சான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தைவான் நாட்டில் காவ்சுயிங் என்ற இடத்தில் நடப்பதாக இருந்த அவரின் இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று சிங்கப்பூர் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
New coronavirus infections increase in Singapore and Hong Kong