எங்களின் அணுசக்தி திட்டம் அமைதிக்காகவே - பாகிஸ்தான் பிரதமர் அடேங்கப்பா விளக்கம்!
nuclear power Pakistan
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காகவே என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதியளித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் மாணவர்களை நேரில் சந்தித்து உரையாற்றிய அவர், “நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் தனது அணுசக்தி திறன்களை மேம்படுத்தி வருகிறது. ஆனால், அதனை போர் நோக்கில் பயன்படுத்துவது எங்களுடைய நோக்கம் இல்லை” என்றார்.
இந்தியாவுடனான சமீபத்திய பதட்டங்கள், அணுசக்தி மோதலுக்குத் திடீர் பிணைப்பு ஏற்படுத்தும் என வலியுறுத்தப்படும் கருத்துகளை நிராகரித்த ஷெரீப், “அணுசக்தி என்பது ஒரு பொறுப்புடைமை; அதை நாங்கள் கவனத்துடன் கையாளுகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்திய பதட்டங்களின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குறிப்பிட்ட அவர், “இந்தியாவுடன் ஏற்பட்ட தகராறில் 55 பொதுமக்கள் உயிரிழந்தனர்” என்றும், பதட்டம் பெருகாமல் தடுப்பது மிகவும் அவசியம் எனவும் கூறினார்.
பாகிஸ்தான் அமைதிக்காக முயலும் நாடாகவே தொடர விரும்புகிறது என்பதையும், சர்வதேச சமுதாயம் அந்நாட்டின் அணுசக்தி பயணத்தை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.