வடகொரியாவில் நெட்பிளக்ஸ் தொடரை பார்த்தவருக்கு உச்சபட்ச தண்டனை.. அதிர்ச்சி தரும் தகவல்கள்..! - Seithipunal
Seithipunal


நெட்பிளக்ஸில் வெப் தொடர் பார்த்ததற்காக வடகொரியாவில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா பல கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அந்நாட்டில் அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் வெப் தொடர்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனா சென்று திரும்பிய ஒரு வடகொரிய நபர் நெட்பிளக்ஸில் பிரபலமான ஸ்குவிட் கேம் தொடரை பென்டிரைவ் மூலம் பிரதி எடுத்து வடகொரியாவிற்கு கொண்டு வந்துள்ளார்.

அதனை ரகசியமாக பென் டிரைவ் மூலம் விற்பனை செய்துள்ளார். இதனை வாங்கிய பள்ளி மாணவன் ஒருவன் அந்த தொடரை நெருங்கிய தோழர்களுடன் சேர்ந்து அந்த தொடரை பார்த்துள்ளார்.

மாணவர்கள் ரகசியமாக வெப் சீரிஸ் பார்ப்பதை அறிந்த வடகொரிய அரசு விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் குற்றம் நிருப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த வெப்தொடரை கொண்டு வந்தவருக்கு மரண தண்டனையும் வெப் தொடர் அடங்கிய பென் ட்ரைவை வாங்கிய பள்ளி மாணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட மாணவரின் பென் ட்ரைவை வாங்கி வீடியோ சீரிஸ் பார்த்த 6 மாணவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை துப்பாக்கிச்சூடு மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north korean man gets death for selling netflix squid game webseries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->