என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது..டொனால்டு டிரம்ப் பேட்டி!  - Seithipunal
Seithipunal


நான் அதைச் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது என ஈரான் மீது தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் கூறினார்.


இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இந்த மோதல் நேற்று 6-வது நாளாக நீடித்தது.

தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும்நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகின்றன.

குறிப்பாக ஈரானின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் டெஹ்ரான் வரை ஈரானின் வான் பகுதியை தங்கள் போர் விமானங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எந்தவித தடையும் இன்றி தாக்குதல் தொடுத்து வருவதாகவும் இஸ்ரேல் கூறியது.மேலும் டெஹ்ரானில் உள்ள ஈரான் புரட்சிகர படையின் 10 கட்டளை மையங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்தார்.

தங்களிடம் சரண் அடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த மிரட்டலை ஈரான் உச்சதலைவர் காமெனி நிராகரித்தார்.இதையடுத்து  அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் முடிவை அமெரிக்கா நெருங்கி வருகிறதா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த டிரம்ப்  "நான் அதைச் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No one knows what I am going to do Donald Trump interview


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->