110 விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை... போகோஹராம் பயங்கரவாதிகள் அட்டூழியம்..! - Seithipunal
Seithipunal


ஆப்ரிக்காவின் வடக்கு - மத்திய பகுதியில் அமைந்துள்ள நைஜீரிய நாட்டினை சுற்றி, லிபியா, சூடான், சாட், கமரூன் நாடுகள் உள்ளது. இந்த நாடுகளில் போஹோகராம் (Boko Haram) மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி காணப்படுகிறது. 

இவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இராணுவம் மற்றும் இராணுவத்தின் ஆதரவு பெற்ற குழுக்களும் இயங்கி வருகிறது. இதனால் பயங்கரவாதிகளுக்கும் - இராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில், அரசுக்கு தகவல் அனுப்புவதாக கூறி கிராமத்திற்குள் புகும் பயங்கரவாதிகள், மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சோகமும் அரங்கேறி வருகிறது. அங்குள்ள மைதூறுகி (Maiduguri, Borno) மாகாணத்தில் உள்ள கோஷாபி கிராம விவசாய நிலத்தில் 110 தொழிலாளர்கள் பணிகளை செய்துகொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த போஹோகராம் பயங்கரவாதிகள் விவசாயிகளை சிறைபிடித்து, கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் முகமது புஹாரி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nigeria Maiduguri, Borno Boko Haram Terrorist Killed 110 Agriculture Former peoples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->