புத்தாண்டு இரவு மரண ஓசை: சுவிட்சர்லாந்து நாட்டை உலுக்கிய தீ விபத்து...! - 47 பலி
New Years Eve death toll fire accident that shook Switzerland 47 dead
சுவிட்சர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா மையமான கிரான்ஸ்-மொந்தனா பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல பார், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் களைகட்டிக் கொண்டிருந்த வேளையில், பேரதிர்ச்சிக்குரிய விபத்துக்கு சாட்சியாக மாறியது.
300 பேர் அமரக்கூடிய கொள்ளளவை கொண்ட அந்த பார், வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு மூடப்படும் நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

கண நேரத்தில் கரும்புகை பாரை முழுவதும் மூடி, அங்கிருந்தவர்களை மூச்சுத்திணறடித்தது. வெளியேறும் வழிகள் புகையால் அடைக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கானோர் உள்ளே சிக்கி உயிர் காக்க போராடும் சூழல் உருவானது.
இந்த கொடூர தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 47 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து அரசு 5 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது.
புத்தாண்டு மகிழ்ச்சி மரணச் சோகமாக மாறிய இந்த விபத்து, உலகம் முழுவதும் கவலைக்குரிய செய்தியாக பரவி வருகிறது.
English Summary
New Years Eve death toll fire accident that shook Switzerland 47 dead