பர்மா பயங்கரவாத முகாம் மீது இந்திய இராணுவம் ட்ரோன் தாக்குதல்? பெரும் புள்ளி கொலை?!
Myanmar indian army attack
மியான்மர் எல்லையில் உள்ள தடைசெய்யப்பட்ட அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா-I) அமைப்பின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உல்ஃபா(I) அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அதிகாலை நேரத்தில் பல நகரும் முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதலில் முக்கிய ஒரே தலைவருள் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 19 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தகவலுக்கு இந்திய ராணுவம் முற்றுப்பூரான மறுப்பு தெரிவித்துள்ளது. ராணுவ தகவல் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத், “இத்தகைய எந்த நடவடிக்கைக்கும் எங்களிடம் பதிவுகளோ, தகவல்களோ இல்லை” என பி.டி.ஐ-யிடம் கூறினார்.
35 ஆண்டுகளாக மியான்மர் பகுதிகளில் அடிக்கடி முகாம்களை மாற்றி செயல்பட்டு வரும் உல்ஃபா (I), இந்தியாவிற்குள் பல்வேறு உள்நாட்டு தாக்குதல்களுக்குப் பின்னணியாக இருந்து வருகிறது.
தற்போது உள்ள நிலைமையில், இந்த ட்ரோன் தாக்குதல் குறித்த தகவல்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதை இந்திய இராணுவம் விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Myanmar indian army attack