எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி விபத்து.. 14 பேர் உடல் கருகி பலியான சோகம்.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோ நாட்டில் உள்ள மேற்கு பகுதியில் நயாரித் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தேசிய நெடுஞ்சாலையில் திரவமாக மாற்றப்பட்ட சமையல் எரிவாயு ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரியொன்று சென்று கொண்டு இருந்தது. 

இந்த லாரி அதிவேகத்தில் சென்று கொண்டு இருக்கையில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து, முன்னால் சென்ற வாகனத்தின் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த திரவ எரிவாயு சாலையில் ஆறாக ஓடியது. 

பின்னர் இறுதி அத்தியாயம் (Final Destination) திரைப்பட பாணியில், பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், லாரியுடன் சேர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களும் தீக்கு இறையாகியது. இவ்விபத்தில் லாரியின் ஓட்டுநர் உட்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mexico Truck Accident 14 Persons died


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal