மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி; முதலிடத்தில் மும்பை; தமிழ்நாட்டின் GSDP எத்தனை லட்சம் கோடி தெரியுமா..? - Seithipunal
Seithipunal


மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதில் 'மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி' (Gross State Domestic Product) மிக முக்கிய அளவுகோலாகக் கருதப்படுகிறது. 

அதன்படி, தமிழக அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார மதிப்பு ₹40,67,312 கோடியை (சுமார் ₹40.67 லட்சம் கோடி) எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது,மாநிலத்தின் எல்லைக்குள், ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த பண மதிப்பே GSDPஆகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒரு வருடத்தில் தங்கள் உழைப்பின் மூலம் புதிதாக உற்பத்தி செய்த பொருட்களின் மதிப்பும், அவர்கள் வழங்கிய சேவைகளின் கட்டணமும் சேர்ந்த ஒட்டுமொத்த வருவாய் மதிப்பு தான் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.

கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் ₹31,15,998 கோடியாக இருந்த தமிழகத்தின் பொருளாதார மதிப்பு, 2025-26 ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் (Revised Estimate) ₹35,67,818 கோடியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து, நடப்பு 2026-27 நிதியாண்டில் இது ₹40.67 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் படி, நாட்டின் ஒட்டுமொத்த மாநிலங்களின் ஜிஎஸ்டிபி (GSDP) பட்டியலில், அதிகப்படியான  பொருளாதார மதிப்புடன் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் பொருளாதார மதிப்பு தோராயமாக ₹54 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழ்நாடு ₹40.67 லட்சம் கோடியுடன் 02-வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் தவெக தலையில் புதிய ஆட்சி அமைந்துள்ள இந்தச் சூழலில், முந்தைய நிதியாண்டுகளின் கடன் சுமை மற்றும் தற்போதைய பட்ஜெட்டின் வருவாய்ப் பற்றாக்குறை ஆகிய சவால்களுக்கு மத்தியில், இந்த ₹40.67 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சுழற்சியைச் சீராகத் தக்கவைப்பது புதிய அரசின் மிக முக்கியக் கடமையாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் அதே சூழலில்  எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மூலதன முதலீடுகள் (Capital Expenditure) ஆகிய இரண்டையும் சமஅளவில் காக்க வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு எவ்வாறு அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know the economic value of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->