'அதிகாரம் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியில் பிரதமர் மோடியை ராகுல் விமர்சிக்கிறார்'; மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் காட்டம்..!
Union Minister Giriraj Singh states that Rahul is criticizing Prime Minister Modi out of frustration stemming from being denied power
''ராகுல், விரக்தி அடைந்துள்ளார். இது அதிகாரம் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தி. அவர் பிரதமர் மோடியை மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் அவமதித்துள்ளார். இது விரக்தியின் வெளிப்பாடு'' என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார் இந்நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்து கூறியுள்ளதாவது;
''ராகுல், விரக்தி அடைந்துள்ளதாகவும், இது அதிகாரம் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தி எனவும், அவர் பிரதமர் மோடியை மட்டும் அவமதிக்கவில்லை எனவும், ஒட்டுமொத்த நாட்டையும் அவர் அவமதித்துள்ளார்.

இது விரக்தியின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளதோடு, முந்தைய ஆட்சியாளர்களால் தேசத்தை வளர்ச்சி பெற செய்ய முடியவில்லை. ஆனால், பிரதமர் மோடி அப்படி இல்லாமல் தேசத்தை வளர்ச்சி பாதை நோக்கி அழைத்து செல்கிறார். அவர் மீதுதான் எதிர்க்கட்சியினர் வசை பொழிகிறார்கள் என்று விமரித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஐந்து பில்லியன் டாலர் முதலீட்டை தேசத்துக்கு கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இது தேசத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்குமா? வலுவிழக்க செய்யுமா? எண்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், நெதர்லாந்தில் உள்ள டெக் நிறுவனங்களுடன் இணைந்து டாடா நிறுவனம் செமிகண்டக்டர்களை இங்கு உற்பத்தி செய்தால் அதன் பலன் யாருக்கு கிடைக்கும்? எனவும் சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.
English Summary
Union Minister Giriraj Singh states that Rahul is criticizing Prime Minister Modi out of frustration stemming from being denied power