ஐநாவின் உயரிய 'அக்ரிகோலா பதக்கம்' பெற்ற பிரதமர் மோடி; உலக அரங்கில் உயர்ந்த இந்தியாவின் பெருமை..! - Seithipunal
Seithipunal


ஐநாவின் உயரிய பதக்கமான 'அக்ரிகோலா பதக்கம்' (Agricola Medal) பாரத பிரமர் நரேந்திர மோடிக்கு,  எஃப்ஏஓ அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கியூ டோங்யு
வழங்கிக் கௌரவித்துள்ளார்.

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகத்தில் நடைபெற்ற பிரத்யேக விழாவில், புகழ்பெற்ற மற்றும் மிக உயரிய கௌரவமான இந்த 'அக்ரிகோலா பதக்கம்' (Agricola Medal) வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இந்த மாபெரும் கௌரவத்தை இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், விவசாய விஞ்ஞானிகள் மற்றும் இந்தத் துறையைச் சார்ந்த உழைப்பாளர்களுக்கு முழுமனதாக அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது;

இந்த 'அக்ரிகோலா விருது' என்பது உணவுப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் மனித நலன் ஆகியவற்றில் இந்தியா கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தியா தற்போது காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய, நிலையான மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற ஒரு நவீன விவசாய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருவதாகவும், நாடு முழுவதும் அறிவியல் பூர்வமான விவசாயம் ஒரு மக்கள் இயக்கமாக ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய சூழலில் இந்திய விவசாயத் துறையின் மிகப்பெரிய பலமாகத் தொழில்நுட்பம் மாறி வருவதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயத்தின் எதிர்காலம் என்பது வெறும் உற்பத்தியைப் பெருக்குவதில் மட்டும் இல்லை, மாறாக சிறந்த தரமான மற்றும் சத்தான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில்தான் அடங்கியுள்ளது என்பதைத் மோடி தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi Receives UNs Prestigious Agricola Medal


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->