அதிர்ச்சி தகவல்; உலகில் அதிக வெப்பம் பதிவாகும் முதல் 100 நகரங்களில் 95 நகரங்கள் இந்தியாவில்; முதலிடத்தில் எந்த நகரம் தெரியுமா..? - Seithipunal
Seithipunal


உலகில் அதிக வெப்பம் பதிவாகும் முதல் 100 நகரங்களில் 95 நகரங்கள் இந்தியாவில் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அதிலும், உத்தரபிரதேசம் மாநிலத்தின் பந்தா மாவட்டம் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

அதாவது, மத்திய அரசின் காற்று தரக்குறியீடு தரவுகளின்படி இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதால் உலகளாவிய வெப்ப அலையின் மையப்பகுதியாக இந்தியா மாறியுள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவும் சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு அருகிலும் பதிவாகியுள்ளது.

இந்த பட்டியலில் சிறு நகரங்கள் மட்டுமல்லாது முக்கிய பெருநகரங்களும் இடம் பெற்றுள்ளன. அதன்படி டெல்லி, உத்தரபிரதேசத்தின் பரிதாபாத், சண்டிகர், ஜம்மு, ஆக்ரா, அயோத்தி, குவாலியர், கோட்டா மற்றும் ராய்ப்பூர் ஆகிய பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உத்தரபிரதேசம் மாநிலத்தின் பந்தா மாவட்டம் உலகில் அதிக வெப்பம் பதிவாகும் நகரங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு உலர்ந்த காற்று, மேகமின்மை, மழை இல்லாமை மற்றும் முன்-மழைக்கால செயல்பாடுகள் உள்ளிட்டவை காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், வெப்பம் சார்ந்த நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வானிலை மையம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

95 of the Top 100 Hottest Cities in the World Are Located in India


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->