2 பெண்கள் உட்பட 12 பேர் கழுத்தறுத்து படுகொலை.. போதைப்பொருள் கும்பல் அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


தென்னமெரிக்க நாட்டில் ஒன்றாக இருக்கும் மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அட்டூழியம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கும்பல்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில், இந்த கும்பல்கள் கொன்று குவிக்கப்படும் சம்பவம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. 

இதனைப்போன்று இந்த கும்பல்களுக்கு இடையேயான சண்டையில் பொதுமக்கள் கொன்று குவிக்கப்படும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், மெக்சிகோ நாட்டில் உள்ள வடக்கு பகுதியான சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஸ் நகரம் உள்ளது. 

இந்த நகரில் உள்ள சாலையில் 2 வேன்கள் கேட்பாரற்று இருந்துள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கு சென்று சோதனை செய்கையில் 2 பெண்கள் உட்பட 12 பேரின் சடலம் இருந்துள்ளது. 

இந்த சடலங்களை காணுகையில் அவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு இருந்ததும், பிணங்களுக்கு அருகே போதைப்பொருள் இருந்துள்ளதும் தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mexico Drug Mafia gang murdered 12 members


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->