திபெத்தில் மீண்டும் இயற்கையின் கோரத்தாண்டவம்; வெள்ளச் சுவடுகள் காயும் முன்னே பாரிய நிலநடுக்கம்; பீதியில் உறைந்துள்ள மக்கள்..!
Massive earthquake in Tibet
திபெத் - நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவு காரணமாக உருவான நேபாள பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,252 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் வெள்ளப் பேரழிவில் 4,875-க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர். இமயமலைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று லெண்டே நதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு, நேபாளத்தின் போடே கோஷி நதி வழியாக சீறிப்பாய்ந்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது
இந்த நேபாள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே மீள முடியாமல் திபெத் தவித்து வருகிறது. இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இந்த புயலால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக, அங்குள்ள கியிராங் என்ற துறைமுக பகுதியில் மிகப்பெரிய வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது.

இந்நிலையில், மீண்டும் மற்றொரு இயற்கை பேரிடர் அந்த பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது. அதாவது, திபெத் பகுதியில் 05 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் அளித்துள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட காயங்கள் அல்லது பொருட்சேதம் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
திபெத் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது, அந்த பகுதி மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியை, இந்த நிலநடுக்கம் பாதித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
Massive earthquake in Tibet