முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு; தெலங்கானா காங் அமைச்சர் கொண்ட சுரேகா பதவி நீக்கம்..! - Seithipunal
Seithipunal


தெலங்கானா முதல்வருக்கு எதிராக வனத்துறை அமைச்சர் கொண்ட சுரேகாவின் மகள்சுஷ்மிதா வெளிப்படையாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததையடுத்து, அமைச்சரவையில் இருந்து சுரேகா நீக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது சகோதரரின் செயல்பாட்டில் இல்லாத நிறுவனத்துக்கு (ஷெல் கம்பெனி) முக்கியப் பகுதியில் உள்ள நிலத்தை மலிவான விலைக்கு வாரி வழங்கியதாக வனத்துறை அமைச்சர் கொண்ட சுரேகாவின் மகள் கொண்ட சுஷ்மிதா குற்றம்சாட்டி இருந்தார்.

அதேப்போன்று, பணத்தைக் கொடுத்தே தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வனபர்தி எம்எல்ஏ மேகா ரெட்டி பெற்றதாகவும், தெலங்கானா மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநில திட்டக் குழு துணைத் தலைவருமான சென்னா ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார்.

இவர்கள் இருவரின் கருத்துக்களை அடுத்து, இருவரிடமும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. அப்போது தனது மகளின் கருத்துக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும், அது அவரது தனிப்பட்டக் கருத்து என்றும்கொண்ட  சுரேகா விளக்கம் அளித்தார்.

இதையடுத்து விசாரணை அறிக்கையை, கட்சியின் மாநில தலைவர் மகேஷ் குமார் கவுட் இடம் வழங்கப்பட்டது. அப்போது இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, இருவரது பதவிகளையும் பறிக்க கட்சி மேலிடம் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து கொண்ட சுரேகாவை நீக்குவதற்கான பரிந்துரை கடிதத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆளுநர் சிவ பிரதாப் சுக்லாவுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், சென்னா ரெட்டியும் திட்டக் குழுவின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தெலங்கானா மகளிர் ஆணையத்தின் தலைவர் கட்வால் விஜயலட்சுமி திட்டக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மாநில மகளிர் ஆணையத் தலைவராக நெரெல்லா சாரதா நியமிக்கப்பட்டுள்ளதோடு, காகதியா நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக முன்னாள் எம்பி சுதா ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுரேகா தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reason for Telangana Congress Minister Konda Surekha's dismissal


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->