கிறிஸ் நாட்டின் கடைசி மன்னர் இரண்டாம் கான்ஸ்டென்னின் காலமானார்.! - Seithipunal
Seithipunal


கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை கிரீஸ் நாட்டின் மன்னாராக இருந்தவர் இரண்டாம் கான்ஸ்டென்னின். இவர் தனது இருபத்து மூன்றாம்  வயதில் கிரீஸ் நாட்டின் மன்னராக அரியணையில் அமர்ந்தார். 

இதையடுத்து கிரீஸ் நாட்டில் மன்னாராட்சி முறைக்கு கடந்த 1967-ம் ஆண்டு முதல் எதிர்ப்பு எழுந்த வந்த நிலையில் இரண்டாம் கான்ஸ்டென்னின் நாட்டை விட்டு வெளியேறினார். 

அதன் பின்னர், கடந்த 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்தது. அதனால், அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், நாட்டில் மக்களாட்சி மலர்ந்த பிறகு நாடு திரும்பினார். 

இந்த நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான இரண்டாம் கான்ஸ்டென்னினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கிறிஸ் நாட்டின் இரண்டாம் கான்ஸ்டென்னின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

last king of greeze constantine died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->