கொரோனாவை தொடர்ந்து பரவும் நிமோனியா.. உலக சுகாதார அமைப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


மத்திய ஆசியாவில் இருக்கும் கஜகஸ்தான் நாட்டில் 58,253    பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு மொத்த பலி எண்ணிக்கை 264 ஆக இருக்கிறது. தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், அங்கு புதுவகை நிமோனியா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனாவால் உயிரிழந்த நபர்களை விட, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை அதிகளவு இருக்கிறது. 

இந்த விஷயம் தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பு அவசர கால திட்ட தலைவர் ரேயான், கஜகஸ்தான் நாட்டில் நிமோனியா காய்ச்சல் பரவி வருகிறது. இதனை உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், நிமோனியாவும் அங்கு அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kazakhstan Nimoniya fever


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal