விமானத்தில் பறக்க போகும் யானை.! பாகிஸ்தானின் 35 வருட கொடூரம் முடிவுக்கு வந்தது.! - Seithipunal
Seithipunal


இலங்கை நாட்டை சேர்ந்த கவான் எனும் யானைக்குட்டி, அந்நாட்டு அரசால் பாகிஸ்தானுக்கு அன்பளிப்பாக கடந்த 1985ஆம் ஆண்டு வழங்கபட்டது. அன்று முதல் பாகிஸ்தானின் உயிரியல் பூங்காவில் இருந்து வரும் இந்த யானைக்கு, அந்நாட்டு பூங்கா நிர்வாகிகள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளது.

இந்த யானையின் நகங்களில் ஊசியால் குத்துவது, வேடிக்கை காட்டுவதற்காக இதற்கு பல்வேறு துன்பங்களை அந்நாட்டு உயிரியல் பூங்கா நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இதற்கிடையே சமூக ஆர்வலர்கள் மீட்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் இந்த யானையை ஒரு கூட்டத்துடன் வசிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

பல்வேறு தரப்பு சமூக ஆர்வலர்களின் முயற்சியால் இசைக்கலைஞர் சீர் என்பவர் எடுத்த நடவடிக்கையின் மூலமாக, யானைக்குட்டி கவான் பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவுக்கு விமானம் மூலம் பறக்க உள்ளது.

இந்த யானைக்காக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட விமானம் தயாராக உள்ளது என்றும், பாகிஸ்தானிலிருந்து கவான் நாளை கம்போடியாவுக்கு பறந்து செல்ல உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மணி நேர விமான பயணத்தில் யானையுடன் கால்நடை மருத்துவர்களும் உடன் செல்கிறார்கள். பின் கம்போடியாவில் உள்ள பூங்காவில் ஒப்படைக்கப்படும். அந்த உயிரியல் பூங்காவில் ஏற்கனவே மூன்று பெண் யானைகள் இருப்பதால், அங்கு கவான் யானைக்கு நல்ல சூழ்நிலையும், நல்ல ஒரு நிலையும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaavan elephant shift to cambodia


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->