#BreakingNews: அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடன்.! மண்ணை கவ்விய டிரம்ப்.! கமலா ஹாரிஸால் தமிழர்கள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. வழக்கத்திற்கு மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து வந்தது. 

இந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி 538 வாக்காளர் குழுவின் வாக்குகளில் ஜோ பிடன் 253 வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்று இருந்தனர். பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவைப்படுகிறது என்பதால் ஜோ பிடனுக்கு வெற்றிவாய்ப்பு அதிகரித்த நிலையில், பென்சில்வேனியாவில் 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 29 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் ஜோ பிடன் இருந்ததை தொடர்ந்து அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. 

284 எலக்ட்ரோட்ர வாக்குகள் பெற்று ஜோ பிடன் அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக தேர்வாகி இருக்கிறார். நான்கு நாட்களாக அமெரிக்க தேர்தலில் நீடித்த இழுபறி இன்று முடிவுக்கு வந்தது. 

தொடர்ந்து அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தமிழகத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகி இருக்கின்றார். அமெரிக்காவின் துணை அதிபராக சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வாவது தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

joe bidan won usa election


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->