'யூத எதிர்ப்பு கொள்கை புற்றுநோய் போன்றது'; ஆஸி., அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர்..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் யூத மதத்தினர்  'ஹனுக்கா' எனும் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் புகுந்த இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 11 பேர் கொல்லப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது பயங்கரவாதிகளில் ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். மற்றொருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் இது குறித்து அவர் மேலும், கூறியதாவது: 

''கடந்த 03 மாதங்களுக்கு முன்பு, '' உங்களது கொள்கை, யூத எதிர்ப்பு என்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது'' எனத் தெரிவித்து இருந்தேன். யூத எதிர்ப்பு கொள்கை என்பது புற்றுநோய் போன்றது. தலைவர்கள் மவுனமாக இருந்து நடவடிக்கை எடுக்காத போது உலகம் முழுவதும் பரவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான மோதலின் போது, பாலஸ்தீனத்தை தனி நாடாக ஆஸ்திரேலியா அங்கீகரித்தது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். தற்போது அதனை மேற்க்கோள் காட்டி, கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israeli Prime Minister condemns the Australian government over attacks on Jews


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->