ஐ.நா-வை தாக்க இஸ்ரேல் திட்டம்?...ஐ.நா செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து நேற்று முன்தினம் ஈரான் ஏவுகணைகளை வீசியது. 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஒரே சமயத்தில் வீசி ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர்  இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்த நிலையில், இதனை செய்யாமல் மவுனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது என்றும், குறிப்பாக இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச்செயலாளர் காலடி எடுத்து வைக்க அந்தோனியோ குட்டரெஸ் தகுதியற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel plan to attack the un secretary is banned from entering Israel


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->