வீடியோ: சுக்கு நூறான எமன் விமான நிலையம்! இஸ்ரேல் இராணுவம் கடுமையான தாக்குதல்! 
                                    
                                    
                                   Israel attack Yemen airport Houthi rebels
 
                                 
                               
                                
                                      
                                            ஹவுதி அமைப்பை இலக்காகக் கொண்டு, ஏமனின் சனா விமான நிலையத்தை இஸ்ரேல் இராணுவம் இன்று இரண்டாவது முறையாக தாக்கியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், காசா போருக்கு எதிராக ஹவுதிகள் இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் தாக்கியதற்குப் பதிலாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.
மே 6ஆம் தேதி இஸ்ரேல் சனா விமான நிலையத்தை கடைசியாகக் குறிவைத்திருந்தது. அப்போது விமான நிலைய முனையம் மற்றும் ஓடுபாதை பலத்த சேதமடைந்தன. பின்னர் மே 17 அன்று சில விமானங்கள் மீண்டும் இயக்கத்துக்கு வந்தன.
இந்த நிலையில், விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிய வேளையில், இன்றைய தாக்குதல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Israel attack Yemen airport Houthi rebels