ஈரான் போர் இறுதிக்கட்டத்தில்...! - உலக கவனத்தை ஈர்த்த டிரம்பின் அதிரடி பேச்சு...!
Iran war final stages Trump dramatic speech that attracted world attention
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தீவிரமடைந்த சூழலில், உலகின் கவனத்தை ஈர்த்த இந்த மோதல் தற்காலிகமாக ஓரளவு தணிவடைந்துள்ளது. இரு நாடுகளும் 2 வார கால தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், பின்னணியில் நடந்த பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் முடிவடைந்ததாக தெரவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை முடங்கியதைத் தொடர்ந்து, முக்கியமான ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமான நடவடிக்கைகளை அறிவித்தார். மேலும், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல் பாதைகளை முற்றுகையிட்டு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதன் படி, மத்திய கிழக்கு கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை வலுவாக திரளச் செய்யப்பட்டு, ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட பல போர் கப்பல்கள் முன்வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரவிக்கின்றன.இந்த பதற்றமான சூழ்நிலையிலும், தீர்வை நோக்கிய முயற்சிகள் மறையாமல் தொடர்ந்து வருகின்றன.
21ம் தேதி முடிவடைய உள்ள இந்த தற்காலிக போர்நிறுத்தத்திற்கு முன் நிலையான ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில், 2வது சுற்று பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துணை பிரதமர் இஷாக் தார், ராணுவ தளபதி ஆசிம் முனிர் ஆகியோர் உயர்மட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு, இரு தரப்பையும் சமரசத்திற்கு கொண்டு வர தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடைபெறலாம் என தரப்புகள் தெரவிக்கின்றன.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ஈரானுடன் நடைபெறும் மோதல் இறுதி கட்டத்தை நோக்கி நகர்கிறது எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், ஈரான் அணு ஆயுத திறனை பெறுவது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் திடமாக வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“இப்போது தாக்குதலை நிறுத்தினாலும், ஈரான் மீண்டும் எழுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். எங்கள் நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை. நிலைமையை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
ஈரான் ஒப்பந்தத்திற்கு வர விருப்பம் காட்டுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் அணுசக்தி திறன்களை கட்டுப்படுத்துவது அவசியம். அந்த திறன் அவர்களிடம் இருந்திருந்தால், உலகமே அவர்களை அச்சத்துடன் அணுகியிருக்கும்” என தெரிவித்ததாக தெரவிக்கப்படுகிறது.
English Summary
Iran war final stages Trump dramatic speech that attracted world attention