பிரபல சினிமா தயாரிப்பாளர், மனைவி படுகொலை! தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


ஈரான் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83) இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்களது மகள் மோனா. இவர்கள் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். 

நேற்று முன்தினம் தரியூர் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டிற்கு வரும் படி செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். 

இதனை தொடர்ந்து மோனா சுமார் 1 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது பெற்றோர் இருவரது கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தனர். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மோனா உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தரியூர் மற்றும் அவரது மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்தனர். அதில் 2 பேரை கைது செய்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல சினிமா தயாரிப்பாளர் உயிர் இழந்த சம்பவம் ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran Famous film producer wife killed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->