ஆடை கட்டுப்பாட்டு அதிகாரிகளால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்: போராட்டம் வெடிக்குமா? - Seithipunal
Seithipunal


மேற்காசியா, ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ளது. இந்தச் சட்டத்தை மீறும் பெண்களுக்கு கசையடி, அபராதம் போன்ற தண்டனைகள் விதிக்கப்படும். 

இந்த நாட்டிற்கு வருகை தரும் அயல்நாட்டு பெண்களும் உடல் வெளியே தெரியும்படி ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஒரு வருடத்திற்கு முன்பு மஹ்சா அமினி என்ற இளம் பெண் ஆடை கட்டுப்பாட்டை மீறியதால் மதக்கட்டுப்பாட்டு அமலாக்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் மர்ம முறையில் உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து அந்நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்று. உலக அளவில் ஈரான் அரசின் கட்டுப்பாடுகளுக்கு கடுமையான கண்டனம் இருந்தது. 

இந்நிலையில் ஈரான் பகுதியைச் சேர்ந்த அர்மிடா கராவந்த் (வயது 16) என்ற சிறுமி ஈரான் தலைநகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய சுரங்க நடை பாதையில் நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரது உடையை பார்த்து அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க அதிகாரிகள் ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக தெரிவித்து அவரை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் அதிகாரிகள் அர்மிடாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த சிறுமி மயக்கமடைந்து கோமா நிலைக்குச் சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தற்போது அந்த சிறுமிக்கு கடும் பாதுகாப்புக்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறது. குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக சிறுமி கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் சிறுமியின் நண்பர்கள் அதனை மறுத்தனர். 

மத கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிறுமையை கடுமையாக தாக்கியதாகவும் அதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதனால் ஈரான் காவல்துறை கடந்த ஆண்டை போலவே தற்போது போராட்டம் வெடிப்பதை தடுக்க தயார் நிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran dress code enforcers push 16 year girl coma


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->