ஈரான் மோதலால் அமெரிக்காவுக்கு மெகா அடி! ரூ.2.35 லட்சம் கோடி காலி...! - பென்டகன் வெளியிட்ட பகீர் கணக்கு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், அதை நிரந்தர அமைதியாக மாற்றும் நோக்கில் கடந்த 11-ஆம் தேதி பாகிஸ்தானில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஆனால், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் ஒருமித்த முடிவு எட்டப்படாததால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதனால் கடும் அதிருப்தியடைந்த அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதிகளை முற்றுகையிட்டு தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

இந்த நடவடிக்கை ஈரானின் எதிர்ப்பையும் ஆத்திரத்தையும் மேலும் அதிகரித்தது.இதற்கிடையில், லெபனான் பகுதியில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட இடைக்கால போர் நிறுத்தத்தையடுத்து, முக்கிய கடல் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை கடந்த 17-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

இதனை டொனால்டு டிரம்ப் வரவேற்றாலும், ஈரானின் துறைமுக முற்றுகையை அமெரிக்கா நீக்காது என அவர் தெரிவித்தார்.இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தைகள் தொடரும் சூழலில், இந்த மோதலால் அமெரிக்காவுக்கு இதுவரை சுமார் 25 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாக பென்டகன் தற்காலிக கணக்காய்வாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மிகப்பெரிய செலவிற்கு அதிநவீன ஆயுதங்கள் பயன்பாடு, போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்களின் செலவினங்கள், பராமரிப்பு மற்றும் போரில் சேதமடைந்த உபகரணங்களின் இழப்பீடுகள் ஆகியவை காரணமாக உள்ளன.

மேலும் டிரோன்கள், ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ வளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் தடுப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran conflict mega blow America 2point35 lakh crores empty Pentagon outrageous account


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->