இந்தோனேசியா எரிமலை வெடிப்பு: தொடரும் பலி எண்ணிக்கை!
Indonesia volcano death rises
இந்தோனேசியா, சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியதால் அங்கு மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவசரமாக திரும்பினார்.
மலை ஏற்றத்திற்காக மொத்தம் 75 வீரர்கள் சென்றிருந்தனர். அவர்களின் 46 பேர் மட்டுமே கீழே இறங்கி வந்தனர். மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

அதில் 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரை மீட்பு குழு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் 12 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்பு குழு மீட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
எரிமலை வெடிப்பின் காரணமாக காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.
English Summary
Indonesia volcano death rises