அமெரிக்கா "எச்-1பி விசா" பெறுவதில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகுத்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணிபுரிய எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இதில் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஆண்டுக்கு ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பெறுவது அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 2022-ஆம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதில் 3 லட்சத்து 20, 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 72.6 சதவீதமாகும். இதையடுத்து சீனாவை சேர்ந்த 55 ஆயிரத்து 38 பேருக் (12.5 சதவீதம்), கனடாவை சேர்ந்த 4 ஆயிரத்து 235 பேரும் (1 சதவீதம்) எச்-1பி விசா வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம், அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள். இதற்கு முன்பாக கடந்த 2021-ம் நிதியாண்டில் 3.01 லட்சம் இந்தியர்கள் எச்.1பி விசா பெற்றனர். மேலும் பல வருடங்களாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indians continue to be the first to get US H 1B visa


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->