கனடாவில் சோகம் - கார் மோதி இந்திய மாணவி பலி.!
indian student died in canada
கனடாவில் சோகம் - கார் மோதி இந்திய மாணவி பலி.!
இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் கனடா நாட்டிற்கு உயர்கல்வி படிப்பதற்காகச் சென்ற இந்திய மாணவி ஒருவர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசரனை நடத்தியதில், உத்தராகண்ட் மாநிலத்தில் ருதர்பூரைச் சேர்ந்த கீர்த்தி பவேஜா என்ற அந்த மாணவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்படிப்பு படிப்பதற்காக கனடாவிற்கு வந்தது தெரிய வந்தது.
மேலும், அவர் கனடாவில் உள்ள மால்டன் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் மாணவி கீர்த்தி பவேஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர்கல்வி படிப்பதற்காக கனடா சென்ற இடத்தில் இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
indian student died in canada