அணை உடைந்து 15 பேர் பலியான விவகாரம்..! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


ரஷிய நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள குராகின்ஸ்கி மாவட்டம் ஷ்செடிங்கினோ கிராம பகுதியில் செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தின் அணையானது இடிந்து விழுந்து., இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடுத்தடுத்து நான்கு அணைகள் உடைந்த நிலையில்., 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., ஐந்து பேர் மாயமாகினர். 

இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள சி.சி.எம். தங்க சுரங்க கூட்டுறவு அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில்., சுரங்கம் குறித்த ஆவணத்தையும் பறிமுதல் செய்திருந்தனர். 

இதனைத்தொடர்ந்து இடிந்த ஐந்து அணைகளும் அங்குள்ள தங்க சுரங்கத்தின் நீரினை திருப்பி விடுவதற்காக அனுமதியின்றி கட்டியதாக தகவல் வெளிவந்து உறுதி செய்யப்பட்ட நிலையில்., இந்த குற்றத்தை சுரங்க தளத்தின் தலைவரும் ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்த குற்றசாட்டை இயக்குனர் மற்றும் சுரங்க பொறுப்பாளர் ஒப்புக்கொள்ளத நிலையில்., 60 சாட்சிகள் தற்போது வரை விசாரணை செய்யப்பட்டு., இது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மூவரின் மீதும் குற்றம் சாட்டி., நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை செய்ய கூறி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia dam collapsed case judge confirm 3 culpirts


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal