கஸ்டமருக்கும், ஓனருக்கும் களேபரம்.! ஜாலியாக சிப்ஸ் சாப்பிட்ட மனிதர்..! வைரல் #வீடியோ! - Seithipunal
Seithipunal


தற்போது இணையத்தில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கும், உரிமையாளருக்கும் நடைபெற்ற சண்டை வீடியோ வைரலாகி வருகின்றது.

இங்கிலாந்தில் இருக்கும் மிக பிரபலமான உணவகம் க்ர்ம்ப் கபே. இந்த உணவகத்திற்கு அன்றாடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக சிற்றுண்டி சாப்பிட வந்த ஒரு நபருக்கும், கடையின் உரிமையாளரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து தாக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் விலக்க முயற்சிக்க, சிலர் அதனை வீடியோ பதிவு செய்தனர்.

ஆனால், இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலும் ஒருவர் சினிமாவை பார்ப்பது போல இந்த சண்டைக் காட்சிகளை பார்த்துக் கொண்டு சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In England social media trending about man fight eating chips


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->